be in one place.
ஓரிடம் இரு
டேய் கருப்பையா மாட்டு வண்டியை எடுத்துக்கிட்டு மேட்டுப்பட்டி போய் அந்தக்
கரகாட்டம் ஆடுற சொர்னாவைக் கூட்டிக்கிட்டு வாடா. என்றார் வேலுசாமி
மீசையைத் தடவி விட்டுக்கொண்டே.
எதிரே உட்கார்ந்திருந்த எனக்கு தூக்கிப் போட்டது. ஐம்பதைத் தாண்டியும்
இந்த ஆசாமி ஏன் இப்படி ஆட்டம் போடுகிறார். என்று நினைத்துக்கொண்டேன்.
தர்மகர்த்தா என்றால் தர்மத்தை காப்பவர் என்று அர்த்தம் அல்லவா. லேசாய்
சிரிப்பு வந்தது.
தம்பி என்ன ஒரு மாதிரி முழிக்கிறீங்க. நானும் வந்ததிலிருந்து
பார்த்துகிட்டிருக்கேன். சிகரெட் தான் குடிக்க மாட்டேன் னுட்டீங்க.
டிரிங்க்சும் வாங்கி வந்ததைஎல்லாம் நானே குடிச்சாச்சு. இப்ப சொர்னாவைக்
கூட்டி வான்னதும் பேய் முழி முழிக்க ஆரம்பிச்சுட்டீங்க. இந்த இருபதும்
சொச்சத்திலே ஏன் தம்பி இப்படி சாமியார் மாதிரி இருக்கீங்க. அவர் கட கடவென
சிரித்தார்.
நான் வானத்து நிலவையே பார்த்துக் கொண்டிருந்தேன், அருகம்புல் ஓரத்தில்
ஒட்டிக் கொண்ட பனித்துளியை க்ளோஸ் அப்பில் காட்டுவது மாதிரி அந்த நிலா
தென்னை ஓலையின் ஒரு கீற்றில் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. மணி எட்டு
இருக்குமோ. நேற்றோ இன்றோ பௌர்ணமியாய் இருக்க வேண்டும். வயல் காற்று உர
வாசனையோடு ஜில்லென்று முகத்தில் அடித்தது.
நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் களத்து மேடு என்கிற கதிர் அடிக்கிற இடம்.
சுற்றிலும் வயல். கீழண்டைப்புரத்தில் ஒரு பெரிய கேணி. கேணியை ஒட்டி இரண்டு
ரூம் கட்டி அதில் ஒன்றில் மோட்டார் இருந்தது. வயல்
தர்மகர்த்தாவுடையதுதான். ஏன் ஊரே அவருடையதுதான்.
நான் தொல்பொருள் ஆராய்ச்சியாளன். இங்கே கிராமத்துக் கோயிலில் பழைய கல்
வெட்டுக்கள் இருப்பதாய் கேள்விப் பட்டு சென்னையிலிருந்து வந்திருக்கிறேன்.
எனக்கு தர்மகர்த்தா கொடுக்கும் அன்பான உபசரிப்புத்தான் சிகரெட் இத்யாதிகள்.
ஒரு வேலை நான் சாமியார் மாதிரிதான் இருக்கிறேனோ. கல்லூரி நாட்களிலேயே
எனக்கு புத்தகப்புழு என்றுதான் பேர். இப்போதும்கூட கையில் விவேகானந்தரோ
ராமகிருஷ்ணரோ தான் இருக்கும். அப்படி ஏதும் இல்லா விட்டாலும் கூட
நிலவுதான் என் நண்பன். நல்லவன். மௌனமானவன். எல்லாக் காரியங்களுக்கும் ஒரு
காரணம் இருக்கும் என்று சொல்கிறதே கீதை , இதற்கும் ஏதேனும் காரணம்
இருக்கும்.
தூரத்தில் வில்வண்டி வருவது நிலவொளியில் லேசாய்த் தெரிந்தது.
தம்பி, இருபது முப்பது வருசமாய் இது பழகிப்போச்சு தம்பி. சுற்று வட்டார
கிராமங்களிலிருந்து எனக்கு எப்போதும் கூட்டிக்கிட்டு வருகிறவன்
கருப்பையாதான். சின்ன வயசிலே அப்பா இருந்த காலத்திலே சினிமாவுக்குப்
போறதாச் சொல்லிட்டு இப்படி எங்கேயாச்சும் போய் விடுவேன். அப்பா
காலமானதற்கு பிறகு நானே பெரிய தலைக்கட்டாய் ஆனதற்கு அப்புறம் இருந்த
பயமும் போச்சு. எல்லாம் இந்த வயல் வீட்டிலேதான். அவர் மீண்டும் சிரித்தார்.
அந்த சிரிப்பு எனக்கு பிடிக்க வில்லை. பிரம்மச்சரியத்துக்கும்
சாமியாருக்கும் வித்தியாசம் தெரியாத இந்த ஆசாமியை என்ன செய்வது. இவர் என்
இந்த வயசில் இப்படி இருக்கிறார். தான் செய்வது தவறு என்று இவருக்கு
தோன்றாதோ. எதிரில் ஒரு இருபது வயது பையன் இவை எதுவும் தேவை இல்லை என்று
உட்கார்ந்திருக்கிறானே நம்மால் முடியவில்லையே என்று அவமானமாய் இருக்காதோ.
வில்வண்டி களத்தில் வந்து நின்றது. பின்பக்கமாய் ஒரு பெண் இறங்கினாள்.
பக்கத்தில் வந்ததும் வேலுச்சாமியை பார்த்து ஒரு பழகிய சிரிப்பையும்
என்னைப் பார்த்து ஒரு அறிமுகச்சிரிப்பையும் உதிர்த்தாள். நான் என்
கால்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தம்பி ரொம்ப வெட்கப் படுது என்றாள்.
வேலுச்சாமி வயல் பக்கமாய் எழுந்து போனார்.
வண்டியிலே வரும்போதே கருப்பையா சொல்லிச்சு. சார் ரொம்ப சின்னப் பையனாய்
இருக்கார்னு. ஆசையாய் வந்தால் நீ இப்படி இருக்கியே. என்றாள்.
எனக்கு ஏனோ எச்சில் இலை ஞாபகம் வந்தது. உடம்பெல்லாம் கம்பளி பூச்சி ஓடியது.
நிலவு இப்போது தென்னை ஓலையை விட்டு விட்டு அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது.
எனக்கு வேண்டாம். என்று சொல்லி விட்டு சேரில் சாய்ந்தவாறு கண்களை மூடிக் கொண்டேன்.
கண் திறந்து பார்த்தபோது நிலவு உச்சியில் இருந்தது. அவள் இல்லை.
வேலுச்சாமியும் இல்லை. கருப்பையா வில்வண்டி பக்கத்திலேயே வைக்கோல்
பரப்பித் தூங்கிகொண்டிருந்தான்.
உச்சி நிலவு போல் மனமும் தெளிவாய் இருந்தது. தூங்கிப் போனேன்,
சுளீர் என்று வெயில் அடித்து எழுந்தபோது வேலுச்சாமி எதிரில்
உட்கார்ந்திருந்தார். குளித்து சுத்தமாய் வீபூதீ அடித்திருந்தார்.
நேற்றுப் பார்த்த வேலுச்சாமியா இவர். வில்வண்டியையும் கருப்பையாவையும்
காணோம்.
தம்பி, மோட்டார் ஓடுது. போய் குளிச்சுட்டு வாங்க. வீட்டில் போய் சாப்பிட்டுட்டு அப்படியே கோவிலுக்கும் போயிட்டு வரலாம்.
வீடு பெரிய வீடாய் கல் வீடாய் இர



